×

திருவண்ணாமலை எம்பி பங்கேற்பு அண்ணா பல்கலைக்கழகம் பிரிப்புக்கு எதிர்ப்பு

ஆரணி, அக்.16: அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், துணை வேந்தரை டிஸ்மிஸ் செய்யக்கோரியும், ஆரணி அருகே நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி அடுத்த தச்சூர் பொறியியல் கல்லூரி எதிரே நேற்று, திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நரேஷ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்எல்ஏ அம்பேத்குமார், தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கு.ரவி முன்னிலை வகித்தனர். மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். திருவண்ணாமலை எம்பியும், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை ஆர்ப்பாட்டத்ைத தொடங்கி வைத்து பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கொள்கைகளை கடைபிடிக்கும் விதமாக, இந்திய நாட்டை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி வருகிறது. முதலில் அனைத்து துறைமுகங்களையும் தாரை வார்த்து கொடுத்தது. பின்னர் விமான நிலையம், அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது. விவசாயத்தையும் குழிதோண்டி புதைத்துள்ளனர். பல்வேறு போராட்டங்களை நடத்திதான் மாநில உரிமைகளை பெறவேண்டும் என்றால் அதற்கு தொடர்ந்து திமுக பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், அதற்கு துணைபோகும் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தார், வெள்ளை கணேசன், நகர செயலாளர் மணி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவி, முன்னாள் எம்எல்ஏ தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvannamalai MP ,protest ,Anna University ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...