×

அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் மனோஜ்பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு

நெல்லை, அக். 16: அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் மனோஜ்பாண்டியனுக்கு, நெல்லையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக மாநில அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன், கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்ட வழிகாட்டு குழுவில் உறுப்பினராக இடம்பெற்றார். தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து நெல்லை வந்தார். அவருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மனோஜ்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலெட்சுமி, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ, (வடக்கு) கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாநில அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவம், ஏ.கே.சீனிவாசன், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ, மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில மகளிரணி செயலாளர் விஜிலாசத்யானந்த், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், நெல்லை பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பகுதி செயலாளர்கள் மோகன், வக்கீல் ஜெனி, ஹயாத், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, கல்லூர் வேலாயுதம், எஸ்கேஎம் சிவகுமார், இட்டமொழி பஞ். முன்னாள் தலைவர் டென்சிங் சுவாமிதாஸ், மூலைக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் முத்துராமலிங்கம், கதிரவன் ரோச், மகபூப்ஜான், முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துச்செல்வி, தர்மலிங்கம், வக்கீல்கள் ஜோதிமுருகன்,

கோதண்டராமன், வெங்கடேஷ் மற்றும் பாளை ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், கணபதிசுந்தரம், தங்கபிச்சையா, சி.பா.முருகன், அம்ஸ்முருகன், திருத்து சின்னதுரை, மாணவரணி சுஜின்ராஜா, கேடிசி சின்னபாண்டி, காந்திவெங்கடாசலம், சீனிமுகம்மது சேட், டால்சரவணன், அக்ரோ சேர்மன் சுப்ரித் சுப்பிரமணியன், அரியகுளம் செல்வராஜ், முருகேசன், பழனியப்பன், பாலசுப்பிரமணியன், பாறையடி மணி, நத்தம் வெள்ளப்பாண்டி, குறிச்சி சேகர், சிந்துமுருகன, வின்சென்ட் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Manoj Pandian ,AIADMK ,
× RELATED ஆர்டி-பிசிஆர் கட்டண குறைப்பு தனியார் ஆய்வகங்கள் வரவேற்பு