×

கோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசில் பாஜ தர்ணா

கோவில்பட்டி, அக். 16:   பாஜ நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி,  மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் லட்சுமணன், நகர பொதுச்செயலாளர்  முனியராஜ், செய்தி தொடர்பு பிரிவு தலைவர் னிவாசன், நகரச் செயலாளர்  சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  தர்ணாவில் ஈடுபட்டோர், கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த  சமாதான கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பிறகே சாலை விரிவாக்கப்பணிகளைத் துவங்க வலியுறுத்தி கோஷமிட்டதோடு கோட்டாட்சியர் அறைக்குள் சென்றும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் விஜயா,  தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜூ,  டி.எஸ்.பி. கலைக் கதிரவன், இன்ஸ்பெக்டர் சுதேசன்  உள்ளிட்டோர் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தனர். அதன்பிறகே பாஜவினர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்  சென்றனர்.

Tags : Kovilpatti RDO ,office ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் புறக்காவல் நிலையம்