×

சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றிய பெண் பரிதாப சாவு

தாரமங்கலம், அக்.16:தாரமங்கலம் அருகேயுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் வதியன்வளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி மலர்(50), கடந்த இருதினங்களுக்கு முன்பு, வீட்டில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. பின்னர் சிறிது நேரத்தில் உடல்முழுவதும் தீ பரவியது. அங்கிருந்தவர்கள் பலத்த தீக்காயத்துடன் மலரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் மலர் உயிரிழந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : death ,
× RELATED பெண் அடித்து கொலை?: போலீசார் விசாரணை