×

எருமப்பட்டி ஒன்றியத்தில் ₹2.11 கோடி திட்டப்பணிகள்

சேந்தமங்கலம், அக்.16:எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ₹2 கோடியே 11 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ₹15.29 லட்சத்தில் மரக்கன்றுகள் நடும் பணி, பொட்டிரெட்டிப்பட்டியில் ₹40 லட்சத்தில் கிராம சந்தை கட்டப்பட்ட கட்டிடம், பசுமை வீடுகட்டும் பணி, பெருமாபட்டியில், ₹37.32 லட்சம் மதிப்பில் பெருமாபட்டி தூசூர்- வளையப்பட்டி சாலை வரை தார்சாலை அமைக்கும் பணி,  கொடிக்கால் புதூர் ஊராட்சி தூசூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ₹11.47 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பிடிஓக்கள் சரவணன், அருளாளன், துணை பிடிஓக்கள் சந்திரா, ஞானசவுந்தரி, பொறியாளர்கள் சாந்தி, சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் மற்றும் மோகனூர் தாலுகாவில் விவசாயத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ராஜவாய்க்கால் மற்றும் பொய்யேரி வாய்க்காலில் ₹184 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்பு பணிகளை, நேற்று கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ராஜவாய்க்காலில் 22 கிலோ மீட்டர் நீளத்திற்கும், பொய்யேறி வாய்க்காலில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கும் கான்கிரீட் சுவர் கட்டும் பணி, கரைகளை பலப்படுத்தும் பணிகள், மதகுகள், மிகுதி நீர்போக்கி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர், பரமத்தி இடும்பன் குளம் ஏரியில் நீர் நிரம்பியுள்ளதை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் யுவராஜ்,  ஆயக்கட்டு பாசனத்தலைவர் மாயாண்டி, பணி மேலாளர் ரமணி, மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு