×

விளைநிலங்கள் பாதிக்காத வகையில் எரிவாயு குழாய்கள்

தேன்கனிக்கோட்டை, அக்.16:  வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி ராயக்கோட்டை முதல் கருக்கனள்ளி, உத்தனப்பள்ளி, கொம்பேப்பள்ளி, சானமாவு மற்றும் டி.கொத்தப்பள்ளி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களில் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்தவும், விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் புதிதாக அளவீடு செய்து தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியிடம், திமுக எம்எல்ஏக்கள் தளி.பிரகாஷ், முருகன் ஆகியோர் மனு அளித்தனர். அப்போது, ஒன்றிய செயலாளர் வெங்கடெஷ், மாவட்ட துணை சேர்மன் ஷேக்ரசீத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : farmland ,
× RELATED பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் 55 அடி...