×

பாமக சார்பில் நலத்திட்ட உதவி

தர்மபுரி,  அக்.16: குமாரசாமிபேட்டையில் முன்னாள் மத்திய மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பிறந்த  நாள் விழாவையொட்டி, சிவசுப்பிரமணியர் கோயிலில் பாமக சார்பில், சிறப்பு  வழிபாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவுக்கு  தர்மபுரி சட்டமன்ற தொகுதி தலைவர் மணி தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர்  சுப்பிரமணியன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில துணை  அமைப்பு செயலாளர் வாசு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். விழாவில், பாமக மாநில துணை பொது செயலாளர்  வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி,  முன்னாள் எம்பி பாரிமோகன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட சிறப்பு செயலாளர்  சின்னசாமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட...