×

சிவகாசி அருகே 62 லட்ச ரூபாய் நலத்திட்ட பணிகள் ராஜவர்மன் எம்எல்ஏ பங்ேகற்பு

சிவகாசி, அக். 16: சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் ரூ. 62 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளுக்கு திறப்பு விழா மற்றும் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை விழா நடந்தது. சாத்துார் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கவிதா பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். அனுப்பன்குளத்தில் பள்ளி சுற்றுச்சுவர், ஆண்டியாபுரத்தில் பள்ளி சுற்றுச்சுவர், பேராபட்டியில் பேவர்பிளாக் ரோடு, சிமெண்ட் ரோடு, வாறுகால் ஆகிய முடிவுற்ற பணிகளை சாத்துார் எம்எல்ஏ ராஜவர்மன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

அனுப்பன்குளம் சத்யாநகர், ஆண்டியாபுரம், மீனம்பட்டியில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை நடத்தி துவக்கி வைத்தார். பம்பு ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட், மாஸ்க் கிப்ட் வழங்கினார். பின்னர் பழமை வாய்ந்த தெப்பகுளத்தை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ் பாண்டியன், மணிகண்டன், வேல்முருகன், ஜெ.பேரவை மாநில துணைச்செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் நகர செயலாளர் வாசன், மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள், வெம்பக்கோட்டை சேர்மன் பஞ்சவர்ணம், கவுன்சிலர் முனியசாமி , ஊராட்சி துணைத்தலைவர் கிருஷ்வேணி, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rajavarman MLA ,Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து