×

விபத்தில் வாலிபர் பலி

காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமுத்தையா(34). இவர் காரியாபட்டியிலிருந்து டூவீலரில் ஊருக்கு சென்றார். கடம்பங்குளம் விலக்கு அருகே வந்த போது, எதிரே வந்த மற்றொரு டூவீலருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜாமுத்தையா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு டூவீலரில் வந்த டி.வேப்பங்குளம் கிராமம் ஈஸ்வரன் படுகாயமடைந்தார். இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான ராஜாமுத்தையா, மாவட்ட திமுக கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் உறவினராவார்.

Tags : accident ,
× RELATED விபத்தில் வாலிபர் பலி