×

தேனியில் இருளில் மூழ்கும் சிவாஜி நகர் சாலை இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சம்

தேனி. அக். 16: தேனியில் புதிய பேருந்து நிலையம் பைபாஸ் ரோட்டில் உள்ளது. இந்த பஸ்நிலையம் வழியாக போடி, கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் தேனி வந்து செல்கின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இந்நிலையில், புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேனி நகருக்குள் செல்லும் பயணிகள் சிவாஜி நகர் சாலை வழியாக செல்கின்றனர். இந்த சாலையில் சிவாஜி நகர் வரை இருபுறமும் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகள் உள்ளன. இதனால், சாலையோரம் நகராட்சி மூலம் தெரு மின்விளக்குகள் அமைக்கப்பபடவில்லை. சுமார் 200 மீ தூரத்திற்கு இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த சாலையில் பயணிகள் செல்ல வேண்டி உள்ளது. இதுபோன்ற சமயங்களில் சமூக விரோதிகள் வழிப்பறி செய்து விட்டு வனப்பகுதிக்குள் ஓடி ஒழிந்து கொள்கின்றனர். மேலும் இச்சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளதால் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு சாலையோரங்களில் அலங்கோகோலமாக கிடக்கின்றனர். இதனால். இரவு நேரங்களில் பெண் பயணிகள் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் புது பஸ்நிலையத்தில் இருந்து சிவாஜி நகர் செல்லும் சாலையில் நகராட்சி நிர்வாகம் மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Shivaji Nagar Road ,Theni ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை