×

பணியை செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட்டல் ஊராட்சி தலைவி கலெக்டரிடம் புகார்

சிவகங்கை, அக். 16: சிவகங்கை அருகே பணிகளை செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட்டுவதாக ஊராட்சி தலைவி, கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். சிவகங்கை ஒன்றியம் கீழப்பூங்குடி ஊராட்சி தலைவர் சண்முகவள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி மற்றும் நிர்வாகிகளுடன் கலெக்டர் ஜெயகாந்தனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கீழப்பூங்குடி ஊராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். இதில் நான் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர்.

குரும்பபட்டி கடம்பவன அய்யனார் கோயில் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆளும்கட்சியை சேர்ந்த சேர்ந்தவர்கள், ஒன்றிய கவுன்சிலர் ஒருவரின் கணவர் ஆகியோர் பணியை செய்யவிடாமல் தடுக்கின்றனர். ஊராட்சி மன்ற தீர்மானத்தை கூறினால் தாங்கள் லஞ்சம் கொடுத்து இப்பணியை எடுத்துள்ளதாக கூறி என்னை சாதியை சொல்லி தடுத்து மிரட்டுகின்றனர். அச்சுறுத்தல் காரணமாக எனக்கும், என் குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்

Tags : party ,Panchayat Chief Collector ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...