×

பாஜக நிர்வாகி விபத்தில் சாவு

பரமக்குடி, அக்.16: பரமக்குடி அருகே டிராக்டர் மீது டூவீலர் மோதி பாஜக நிர்வாகி உயிரிழந்தார். பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேலன்(26). பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பரமக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது தோளூர் அருகே சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது டூவீலர் மோதியது. தலையில் பலத்த காயமடைந்த கதிர்வேலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : BJP ,executive ,accident ,
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...