×

விடுபட்ட பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.16: பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என, ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். விவசாய சங்க நிர்வாகிகள் சோழந்தூர்  பாலகிருஷ்ணன், தெய்வேந்திரன், கிருஷ்ணன், தவமணி, காந்தி, தீனதயாளன்,  வீரமணி, பிரபு, சேகர், விவேகானந்தன், வெங்கடேஸ்வரன், மோகன், திவாகரன்  உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில், கடந்த 2018-19ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்து காப்பீட்டு தொகை வழங்காமல்  விடுபட்ட 117 வருவாய் கிராம விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் 5 ஏக்கருக்கு மேல் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் கூறுகையில், தற்போது விவசாய பணிகள் தொடங்கிவிட்டது. எனவே நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகை கிடைத்தால் செலவு செய்து விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக அமையும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக காப்பீட்டு தொகையை பெற்றுத் தர வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி