×

குப்பைக்கு தீ வைப்பால் வாகன ஓட்டிகள் அவதி

மதுரை, அக்.16:  சாலையோரத்தில் இருந்த குப்பைக்கு தீ வைக்கப்பட்டதால் புகைமூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மதுரை மேலஅனுப்பானடி ரயில்வேகேட் பகுதியில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட கழிவுகள் கொட்டும் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் தான் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிட கழிவுகள் மொத்தமாக கொட்டி வைக்கப்படும். இந்நிலையில், அங்கு அப்பகுதியினரால் துணி, பேப்பர் உள்ளிட்ட குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றன. நேற்று குப்பைமேட்டில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததால் அப்பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. மேலும் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் துணியால் முகத்தை மூடியபடி சென்றனர். அதிகளவில் புகை ஏற்பட்ட நிலையில் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்டுவதாகவும் புகார் எழுந்தது. இதன்பேரில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags : Motorists ,
× RELATED அதிகாலை பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி