×

நாளை கப்பலூர் ரயில்வேகேட் மூடல்


திருமங்கலம், அக்.16:  தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை முதல் மாலை வரையில் கப்பலூர் ரயில்வேகேட் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூர் ஊரின் நுழைவு வாயிலில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வேகேட் நாளை செப்.17ம் தேதி பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் கப்பலூர் ரயில்வே கேட் மூடியிருக்கும். எனவே கப்பலூர், பல்லாக்காபுதுப்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாற்றுப்பாதையை உபயோகப்படுத்தி கொள்ளும்படி கப்பலூர் மற்றும் உச்சப்பட்டி ஊராட்சிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Kappalur Railway Gate ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு