×

நாளை அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு கட்சியினர் திரளாக பங்கேற்க அழைப்பு மாநகர் மா.செயலாளர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை

திருச்சி, அக்.16: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிற்கேற்ப நாளை (17ம் தேதி) அதிமுக 49ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆங்காங்கே அமைந்துள்ள அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி வைத்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டும். அதுசமயம் காலை 10 மணியளவில் திருச்சி கோர்ட் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கப்படும். இதில் கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை, பேரூராட்சி, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Vellamandi Nadarajan ,evening procession ,AIADMK ,
× RELATED திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில்...