×

தா.பேட்டை, முசிறியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தா.பேட்டை, அக்.16: தா.பேட்டை, முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் மணிவேல் தலைமை வகித்தார். திட்ட ஆணையர் லலிதா, மேலாளர் தாஸ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்குதிட்டை என்ற இடத்தில் பட்டியல் இன ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த சம்பவத்தில் பெண் ஊராட்சி செயலரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை கண்டித்தும், போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் மனோகரன் தலைமை வகித்தார். அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags : Demonstration ,Ta ,Rural Development Officers ,Musiri ,Pettai ,
× RELATED ேவலைநிறுத்தத்தை விளக்கி கம்பம், போடியில் ஆர்ப்பாட்டம்