×

உர தட்டுப்பாட்டை போக்க விவசாயிகள் கோரிக்கை கிராமப்புற பெண்கள் தினத்தையொட்டி காய்கறி குழித்தட்டு நாற்று உற்பத்தி பயிற்சி முகாம்

மன்னார்குடி, அக்.16: சர்வதேச கிராமப்புற பெண்கள் தினத்தையொட்டி மூவாநல்லூர் அரசு தோட் டக்கலைப் பண்ணையில் கிராமப்புற பெண்களுக்கான காய்கறி குழித்தட்டு நாற்று உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கிராமப்புறத்தின் அடையாளமாக இருக்கும் வேளாண்மையில் பெண்களின் பங்கு அளப்பரியது. ஆனால், நாள்தோறும் அதிக பணிச்சுமைக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கல்வி, விளையாட்டு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நகர்ப்புற பெண்களுக்குக் கிடைக்கும் வசதி கிராமப்புற பெண்களுக்கு கிடைப்பதில்லை. இதை பற்றி விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து அக்டோபர் 15ம் நாள் சர்வதேச கிராமப்புற தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மன்னார்குடி அடுத்த மூவாநல்லூர் கிராமத்தில் இயங்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கொண்டாடப் பட்டது. இதுகுறித்து, மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் கூறுகையில், இந்தியாவில் பெரும்பாலான பகுதி கிராமங்கள் தான், இங்கு வாழும் பெண்கள் விவசாயத்தினை பெரிதும் நம்பியுள்ளனர், விவசாயம் மட்டுமின்றி மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களும் செய்கின்றனர். இதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் இவர்களது பணி தொடர்கிறது. கிராமப்புற குடும்பங்களில் பெண்களின் வருமானமும் முக்கிய தேவையாக உள்ளது. உலகின் வளர்ச்சிக்கு கிராமப்புற பெண்களின் பங்களிப்பும் மறுக்க முடியாத ஒன்று. இவர்களை அங்கீகரிக்கும் விதத்திலும் உரிய வசதிகள் செய்து தருவதற்கும் சுய தொழில்முனைவோர் ஆக்குவதற்கான பயிற்சியும் அளிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி சர்வதேச கிரா மப்புற பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச கிராமப்புற பெண்கள் தினத்தையொட்டி கிராமப்புற பெண்களுக்கு காய்கறி குழித்தட்டு நாற்று உற்பத்தி செய்வது குறித்து ஒருநாள் பயிற்சி மூவாநல்லூர் அரசு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் அளிக்கப்பட்டது, மேலும், வீட்டு தோட்டங்களில் ஊட்டசத்து மிக்க காய்கறிகள் மற்றும் செடி கள் வளர்ப்பதற்கான நுணுக்கங்கள், செடிகளுக்கு உரம் இடுதல், செடிகள் நடவு செய்யும் முறை போன்றவை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் கூறினார். பயிற்சியின் போது பண்ணை மேலாளர் சூர்யா மற்றும் பண்ணை உதவி மேலாளர் விஜயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : occasion ,Pit Seedling Production Training Camp ,Rural Women's Day ,
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...