×

மூவாநல்லூரில் நடந்தது நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி பகுதியில் குறுவை அறுவடை பணி மும்முரம் நேரடி கொள்முதல் நிலையத்தின் கெடுபிடியால் மக்கள் வேதனை

நீடாமங்கலம், அக்.16: நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12ம் தேதி திறந்த தண்ணீரைப் பயன்படுத்தி சிறு, குறு மற்றும் பெரும் விவசாயிகள் குறுவை, தாளடி, சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளனர். சில விவசாயிகள் விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் சாகுபடி செய்தனர். இந்நிலையில் குறுவை சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால் சித்தமல்லி, பன்னிமங்கலம், லாயம், நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மின் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி மும்முரமாக அறுவடை செய்து வருகின்றனர். தற்போது குறுவை அறுவடை முடிய முடிவுள்ள நிலையில், நேற்று முன்தினம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள நெல்மணிகளை ஒவ்வொரு மூட்டையாக அறுவடை செய்யக்கூடிய மினி அறுவடை இயந்திரம் கோண்டு விறுவிறுப்பான அறுவடை நடை பெற்றது.

திருத்துறைப்பூண்டி:  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு 7500 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து இருந்தனர். குறுவை அறுவடை கடந்த ஒரு மாதமாக துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 75 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய தாலுகா முழுவதும் 23 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெடும்பலம் விவசாயிகள் சங்க தலைவர் மாசிலாமணி கூறுகையில், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்வத்துடன் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறுவை நெல் மூட்டைகளை நெரடி நெல் கொள்முதல் நிலையம் முன் 700 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பல கிராமங்களில் மழையால் குறுவை அறுவடை பாதித்து கதிர்கள் நனைந்து  அந்த நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நெல் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. நெல் மூட்டைகளை காயவைக்க இடம் இல்லாமல் சாலையோரங்களில் காய வைத்து மூட்டைகள் கொண்டு வந்தால் உடனே எடுப்பதில்லை. நெல்மூட்டைகள் பனியின் காரணமாக ஈரப்பதம் கூடுதலாக காட்டுகிறது. ஆனால் ஈரப்பதம் 17 சதவீதம்  வரை உள்ளது மட்டுமே கொள்முதல்  செய்யப்படுகிறது. வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்க முடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே 22சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மூட்டைகளையும் கொள்முதல் செய்ய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு என்றனர்.

Tags : area ,Needamangalam ,Thiruthuraipoondi ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...