×

தாசில்தாரிடம் புகார் மனு தஞ்சை பெரிய கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை ரூ.5.48 லட்சம்

தஞ்சை, அக். 16: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.5.48 லட்சம் இருந்தது. தஞ்சை பெரிய கோயிலில பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 11 உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில் பெரிய கோயில் உண்டியல்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று காலை திறக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். காலையில் துவங்கிய இப்பணி மாலை வரை நடந்தது. இதில் பக்தர்கள் ரூ.5,48,974 காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது. கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் வராததால் உண்டியல்களில் வெளிநாட்டு நோட்டுகள் சேரவில்லை. தஞ்சை பெரிய கோயிலில் 30 அல்லது 40 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்படும். அப்போது ஏறத்தாழ ரூ.10 லட்சம் காணிக்கைகள் சேரும். இந்த முறை 45 நாள்கள் கழித்து உண்டியல்கள் திறக்கப்பட்ட பிறகும் ரூ.5.48 லட்சம் மட்டுமே காணிக்கைகள் இருந்தன.

Tags : Devotees ,Tanjore ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...