அரசு நிதியுதவியில் பசுமைக்குடிலில் வெள்ளரி குடமிளகாய் சாகுபடி செய்யலாம்

தஞ்சை, அக். 16: அரசு நிதியுதவில் பசுமைக்குடிலில் வெள்ளரி, குடமிளகாய் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2020-21ம் நிதி ஆண்டுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட சூழலில் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி, குடமிளகாய் சாகுபடி செய்ய ரூ.4.67,500 நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களின் தேவைக்கேற்ப பசுமைக்குடில் அமைத்து வௌ்ளரி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட சூழலில் (பசுமைக்குடில்) வெள்ளரி மற்றும் குடமிளகாய் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். பசுமைக்குடில் அமைக்க 1 ச.மீட்டருக்கு ரூ.467 அரசு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக விவசாயி ஒருவர் 4,000 ச.மீ வரை பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி மற்றும் குடமிளகாய் சாகுபடி செய்து பயனடையலாம்.

இந்த திட்ட விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் (நடவு பொருள்), தஞ்சை தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் 9965362562, தஞ்சை மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் 9943422198, ஒரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குனர் 9488945801, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் 9445257303, கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் தோட்டக்கலை உதவி இயக்குனர் 7299402881, பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் 8526616956, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் 9445257303 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு விவசாயிகள் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அதில் தெரிவி–்க்கப்பட்டுள்ளது.

Related Stories:

>