×

விவசாயிகளுக்கு அழைப்பு அஞ்சலக வாடிக்கையாளர் கூட்டம்

பாபநாசம், அக். 16: பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் ஆலோசனை கூட்டம் நடந்தது. போஸ்ட் மாஸ்டர் சுமதி, உதவி போஸ்ட் மாஸ்டர் சரவணன், காசாளர் செந்தில் மற்றும் வாடிக்கையாளர்கள் சார்பில் வணிகர் சங்க தலைவர் குமார், கண்ணகி, ராம் பங்கேற்றனர். கூட்டத்தில் அஞ்சலக சேமிப்புக்கான் வட்டி வீதம் குறைந்தது பற்றி வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர். மேலும் கொரோனா கால கட்டத்தில் வாடிக்கையாளர்கள் நலன்கருதி எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கேட்டனர். இதற்கு அஞ்சலகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் டெம்ப்ரேச்சர் சோதிக்கப்படுகிறதுஎன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முககவசம் அணியாதவர்களிடம் ரூ.2.35 லட்சம் அபராதம் வசூல் கும்பகோணம், அக். 16: கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருபுவனம் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வெளியே வருபவர்களை நிறுத்தி பேருராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதிப்பதுடன் இலவசமாக முககவசம் வழங்கி வருகின்றனர். இதில் நேற்று திருவிடைமருதூர் பேரூராட்சி பகுதியில் ரூ.66,400, திருநாகேஸ்வரம் பேரூராட்சி பகுதியில் ரூ.57,600, திருபுவனம் பேரூராட்சி பகுதியில் ரூ.1,07,700 என மொத்தம் ரூ.2,35,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : Farmers Post Office ,Customer Meeting ,
× RELATED பெரியகுளம் வங்கியில் வாடிக்கையாளர் கூட்டம்