×

புதுகை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டை, அக்.16: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (17ம் தேதி) 9.30 மணியளவில் புதுக்கோட்டை நகரம் மாலையீடு அருகே உள்ள எஸ்ஆர் மஹாலில் மாவ ட்ட அவைத்தலைவர் பொன் துரை தலைமையில் நடைபெறும். கூட்டத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், தெற்கு மாவட்டதிற்கு உட்பட்ட ஒன்றிய பெருந்தலைவர்கள் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று, காணொளி காட்சி மூலமாக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழா , கலைஞர் சிலை திறப்பு விழா புதுபிக்கப்பட்ட மாவட்ட திமுக அலுவலகம் திறப்பு விழா, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா ஆகிய விழாக்கள் நடைபெற இருப்பதால் அனைவரும் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Budugai South District DMK Executive Committee Meeting ,