செந்துறை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர், அக்.16: செந்துறை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள மணக்குடையான் ஊராட்சியில், ஊரகவளர்ச்சித்துறையின் சார்பில் கனிமவள மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் தாமரைப்பூண்டி காலனியில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செந்துறை ஒன்றியம், மணக்குடையான் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, தாமரைப்பூண்டிகாலனியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை நேரில் பார்வையிட்டு, பணிகள்தரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், பொதுமக்கள் இடத்திற்கே சென்று குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, செந்துறை ஊராட்சி, செந்துறை காலனியில் உள்ள சமுதாயகூடம் முன்புறம் பொதுமக்களின் எளிதாக செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுபாலத்தினை பார்வையிட்டு, அப்பாலத்தின் நீளம் மற்றும் உயரத்தினையும் ஆய்வு செய்தார். இந்தஆய்வின்போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, சிவாஜி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

More