×

கலெக்டர் சமாதான பேச்சுவார்த்தை பெரம்பலூர் மாவட்டத்தில் 60 காவலர்களுக்கு பேரிடர்கால மீட்பு பணி சிறப்பு பயிற்சி

பெரம்பலூர், அக்.16: பெரம்பலூர் மாவட்ட போலீசார் 60 பேர்களுக்கு கமாண்டோ படையினர் சிறப்புப்பயிற்சி பேரிடர் மீட்புக்காக 2 நாள் பயிற்சியளித்தனர். தமிழக ஏடிஜிபி (ஆபரேஷன்) ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், தமிழ்நாடு கமாண்டோ படைவீரர்களைக் கொண்டு, பேரிடர் கால மீட்புப்பணிகளை மேற்கொள்வது, வட கிழக் குப் பருவமழையின்போது, வெள்ளத்தில் சிக்கியவர்களை பைபர் படகின்மூலம் சென்று மீட்பது, வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயுதப்படை வீரர்களுக்கும், உள்ளூர் போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக கமாண்டோ படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் கமாண்டோபடை வீரர்கள் மகேஷ், கதிரவன், ஜோ ஆகிய 4 பேர் கொண்ட கமாண்டோபடை குழுவினர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் போலீசார் 30 பேர், தண்ணீர் பந்தல் ஆயுதப்படையைச் சேர்ந்த 30 பேர் என மொத்தம் 60 பேர்களுக்கு கடந்த 14, 15ம்தேதி ஆகிய 2 நாட்களுக்கு ஆயுதப்படை வளாகத்திலும், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தனியார் நீச்சல் குளத்திலும் இந்த பயிற்சிகளை அளித்தனர். நேற்று நடந்த நீச்சல் பயிற்சியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து கமாண்டோ படை எஸ்ஐ கண்ணன் தலைமையில் சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Collector peace talks ,district ,Perambalur ,policemen ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி