×

கலெக்டர் தகவல் நீண்ட நாட்களுக்கு பிறகு கரூர் உழவர் சந்தை திறப்பு மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது

கரூர், அக். 16: நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று உழவர் சந்தை திறக்கப்பட்டாலும் கொரோனா பீதி காரணமாக பொதுமக்கள் வரத்தின்றி வெறிச்சோடியே காணப்பட்டது. கொரோனா பரவலை முன்னிட்டு கடந்த ஐந்து மாதத்துக்கும் மேலாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 15ம் தேதி(நேற்று) முதல் கரூர் மாவட்டத்தில் கரூர், வெங்கமேடு, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் திறக்கப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை முதல் கரூர் உழவர் சந்தை வழக்கம் போல செயல்படத் துவங்கியது.
முதல் நாள் என்பதாலும் கொரோனா பீதியாலும் வியாபாரிகளும், விவசாயிகளும் கடை திறந்து வைத்திருந்தபோதும் பெரும்பாலான மக்கள் சந்தைக்கு வராத காரணத்தினால் உழவர் சந்தை வளாகம் வெறிச்சோடியே காணப்பட்டது.

Tags : opening ,crowd ,Karur Farmers' Market ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு