×

ஊட்டி மலை ரயில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஊட்டி,அக்.16:  ஊட்டி ரயில் நிலையத்தில் 112வது மலை ரயில் தினத்தையொட்டி பாரம்பரிய ரயில் அறக்கட்டளை சார்பில் ‘கேக்’ வெட்டி கொண்டாடப்பட்டது. ஊட்டி மலை ரயில் கடந்த 1899ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்பட்டது. 1908 செப்டம்பர் மாதம் 15ம் தேதி குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது. 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி இது ஊட்டி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அக்டோபர் 15ம் தேதி மலை ரயில் தினமாக ஊட்டி பாரம்பரிய ரயில் அறக்கட்டளை சார்பில் கொண்டாடாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதமாக மலை ரயில் இயக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், நேற்று 112வது பிறந்த நாளையொட்டி குன்னூரில் இருந்து நீராவி எஞ்சின் பொருத்திய சிறப்பு ரயில் ஊட்டி வரை இயக்கப்பட்டது.  இதில், ஒரு பயணிகள் பெட்டி மட்டும் பொருத்தப்பட்டிருந்தது. அதில், அதிகாரிகள் மட்டுமே பயணித்தனர். பயணிகள் அனுமதிக்கப்படவில்ைல. மலை ரயில், ஊட்டி ரயில் நிலையம்  வந்தடைந்தவுடன் ரயிலுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஓட்டுநர்களுக்கு மலர் கொடுத்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

தொடர்ந்து, கேக் வெட்டப்பட்டடு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். கலெக்டர் இன்னசென்ட் கூறுகையில், ‘‘யுனஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயில் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படுவது, இந்த மாவட்டத்திற்கு பெருமையாகும். மலை ரயில் இயக்குவதற்கு நாங்கள் அனுமதியளித்துள்ளோம். மலை ரயில் இயக்குவது குறித்து ரயில்வே துறையே முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Ooty Mountain Train ,
× RELATED 22 நாட்களுக்கு பின் ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்