×

பசுந்தேயிலையை தொழிற்சாலைகள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊட்டி,அக்.16: நீலகிரியில் சிறு மற்றும் குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலையை அனைத்து தொழிற்சாலைகளும் கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி எம்பி., ராசா மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ராசா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் 2 லட்சம் சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் 1.5 ஹெக்டருக்கு குறைவான தேயிலை தோட்டங்களை வைத்துள்ளனர். இதில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 65 ஆயிரம் சிறு மற்றும் குறு விவசாயிகள் உள்ளனர்.

இது தவிர டார்ஜிலிங் மற்றும் அசாம் போன்ற பகுதிகளிலும் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரியம் சில அறிவுரை வழங்கியுள்ளது. இதனால், அவர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பசுந்தேயிலையை வாங்க மறுப்பதாக தெரிகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலையை விநியோகம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது தேயிலைக்கு ஓரளவு விலை கிடைத்த போதிலும், தனியார் தேயிலை தொழிற்சாலைகள் சிறு விவசாயிகளின் பசுந்தேயிலை வாங்க மறுப்பதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே, அனைத்து தொழிற்சாலைகளும் சிறு விவசாயிகள் விநியோகிக்கும் பசுந்தேயிலைைய கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், தேயிலை தொழில் மட்டுமின்றி சர்க்கரை, ஜவுளித்துறை போன்றவைகள் பாதித்து வருகின்றன. எனவே, மத்திய அரசு இவைகளின் மீது கவனம் கொண்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராசா தெரிவித்துள்ளார்.

Tags : Factories ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...