×

கொரோனா தடுப்பு நடவடிக்கை, அபராதம் குறித்து மாநகராட்சி சார்பில் 400 இடத்தில் விழிப்புணர்வு பதாகைகள்

கோவை, அக். 16: சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தியும், அதை மீறினால் விதிக்கப்படும் அபராதங்கள் குறித்தும் மாநகராட்சி சார்பாக 400க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால், சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் நகரில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் வசூக்கப்படுகிறது. சாலைகளில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது, அரசின் விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. வீடுகளைவிட்டு வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அரசு கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.  இது குறித்து விழிப்புணர்வு பதாகைகள் மாநராட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்படுகிறது. அத்துடன் ஓட்டல், மளிகைக்கடைகள் உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்’’ என்றனர்.

Tags : Corona ,corporation ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...