கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு

ஈரோடு, அக். 16:  ஈரோடு மாட்டு சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து குறைவாக வந்ததால் விலை சற்று உயர்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுசந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெற்று வருகின்றது. நேற்றைய சந்தைக்கு கன்றுக்குட்டிகள் 70, எருமை 90, கறவை மாடுகள் 260 என மொத்தம் 420 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வழக்கமாக 700 மாடுகள் வரை விற்பனைக்கு வரும் நிலையில் 420 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் ரூ.3 ஆயிரம் வரை விலை உயர்ந்து விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். இது குறித்து சந்தை வியாபாரிகள் கூறியதாவது, நேற்றைய சந்தையில் கறவை மாடுகள் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்பனையானது. வரத்து குறைவால் ரூ.3 ஆயிரம் வரை விலை உயர்ந்து விற்பனையானது. மாடுகளை வாங்க கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர் எனக் கூறினர்.

Related Stories:

>