×

சுகாதார வளாகம் அமைக்க பூமி பூஜை.

திருவில்லிபுத்தூர், அக்.2: திருவில்லிபுத்தூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை மற்றும் பெண்கள் சுகாதார வளாகம் அமைத்திட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். திருவில்லிபுத்தூர் அருகே மல்லிபுதூர் பகுதியில் மக்களின் கோரிக்கையான புதிய நியாய விலை கடை கட்டிடம் மற்றும் பெண்கள் சுகாதார கழிப்பிடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கு சந்திரபிரபா முத்தையா எம்எல்ஏ பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் செல்லபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomi Puja ,
× RELATED நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில்...