தேவாரம் டூ போடி இரவு பஸ் சர்வீஸ் இல்லை

தேவாரம், அக். 2: தேவாரத்தில் இருந்து போடிக்கு இரவு நேரங்களில் அரசு பஸ் சேவை இல்லாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தேவாரத்திலிருந்து போடிக்கு செல்லும் வழியில் லட்சுமிநாயக்கன்பட்டி, சிலமலை, கோனாம்பட்டி, சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராம மக்கள் இரவு நேரங்களிலும் போடிக்கு சென்று, அங்கிருந்து தேனி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்வர். கொரோனா ஊரடங்குக்கு பின், கடந்த செப்.1 முதல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் போடிக்கு பஸ் செல்லுமா? செல்லாதா என பொதுமக்கள் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

 எனவே, தேவாரம்-போடி மார்க்கத்தில் இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: