×

ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி  கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம்  சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் சேதுராமன்  தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘திருவாரூர் மாவட்டம், இடும்பாவனம்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக் கடை பெண் பணியாளர் சித்ராவை,  பொதுமக்கள் முன்னிலையில்  சங்கத் தலைவர் உலகநாதன் தாக்கினார். சித்ரா  சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தாக்கிய சங்கத் தலைவரை போலீசார் கைது  செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags :