×

புன்னக்காயலில் விளையாட்டு திறனாய்வு பயிற்சி முகாம்

ஆறுமுகநேரி, அக். 2:  புன்னக்காயலில் நடந்த விளையாட்டு திறனாய்வு பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்ற எஸ்.பி. ஜெயக்குமார், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.  புன்னக்காயலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு திறனாய்வு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடந்தது. இதையொட்டி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவில் மாவட்ட மகளிர் கால்பந்து நடுவர் ராஸ்மி வரவேற்றார்.  கப்பல் துறை அதிகாரி செல்வின் டால்வின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிலையில்     பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. நிறைவு விழாவுக்கு பங்குத்தந்தை  பிராங்ளின் பர்ணாண்டோ, ஊர் கமிட்டி தலைவர் இட்டோ, புனித வளனார் மேல்நிலைப்  பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ரொங்கா, சில்வா மற்றும் ஊராட்சி மன்ற தலைவி  சோபியா ஆல்வின்  முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கற்ற தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.  இதில் திருச்செந்தூர் டிஎஸ்பி ஹரிஸ் சிங், முன்னாள் டிஎஸ்பி பாரத், திருச்செந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) தமிழ்ச்செல்வி, ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செல்வி, ஆத்தூர் எஸ்.ஐ. மாணிக்கராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Sports Performance Training Camp ,