×

ராகுல் காந்தி கைதை கண்டித்து பரமக்குடியில் காங். போராட்டம்

பரமக்குடி, அக்.2:  உத்தரபிரதேசத்தில் பலாத்காரத்தால் பலியான இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பரமக்குடி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இளம் பெண் பலாத்காரத்தால் பலியானார். அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பரமக்குடி பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேச முதல்வரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இந்த போராட்டத்தில் நகர தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவண காந்தி, மாவட்ட எஸ்சி எஸ்டி அணி தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags : arrest ,Paramakudi ,Rahul Gandhi ,
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்