×

கட்டாய கல்வி சட்டத்தில் 5,752 மாணவர் சேர்க்கை

மதுரை, அக். 2: மதுரை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் (2020-21) சிறுபான்மையரல்லாத பள்ளிகளில் நுழைவு வகுப்பிற்கான கட்டாய கல்வி சட்டத்தின் படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. டிஆர்ஓ காலனியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இதற்கான துவக்க விழா நடந்தது. இப்பள்ளியில் சேர 39 குழந்தைகள் விண்ணப்பித்த நிலையில் 8 இடங்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் துவக்கி வைக்க, குலுக்கல் மூலம் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த 5 குழந்தைகளுக்கும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் நியமன அலுவலர் சோனைமுத்து, மாவட்ட சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து சுவாமிநாதன் கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள 159 மெட்ரிக் பள்ளிகளில் 2,427 இடங்களுக்கும், 284 நர்சரி-
தொடக்கப்பள்ளிகளில் 3,325 இடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் உள்ள 443 பள்ளிகளில் 5,752 இடங்களுக்கு குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெற்றது’ என்றார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ