×

‘பிட் இந்தியா’ விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாகர்கோவில், அக். 2:  நாகர்கோவிலில் பிட் இந்தியா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.  மத்திய அரசு அனைவரும் உடல்தகுதியுடன் ஆரோக்கியத்துடன் இருக்கும் வகையில் ‘பிட் இந்தியா’ என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது. அனைவரும் விளையாட்டு, யோகா உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினால்  மனஅழுத்தம், நோய் நொடியில்லாமல் வாழ வழிவகை செய்யும் என்பது இந்த பிட் இந்தியாவின் நோக்கம். இந்த வருடம் கொரோனா தொற்று காரணத்தால், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மாவட்டம் தோறும் ஒரு நாள் பிட் இந்தியாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியது. அதன்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குமரி மாவட்டத்தில் நேற்று காலை பிட் இந்தியா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

இதன்படி நேற்று காலை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து இந்த விழிப்புணர்வு போட்டி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி தடகள சங்க செயலாளர் காட்வின், தேசிய உயரம்தாண்டுதலில் 3 முறை தங்கம்வென்ற வீரரும், தடகளசங்க துணைதலைவருமான ஆறுமுகம்பிள்ளை ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 75 வீரர்கள் கலந்துகொண்டனர். அண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மாநகராட்சி அலுவலகம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ஜங்சன், வடசேரி காசிவிஸ்வநாதர் கோயில், வடசேரி அண்ணா சிலை வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு மைதானத்தை வந்து அடைந்தது.

Tags : Bit India' Awareness Marathon ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு