×

கவுரவமான ஓய்வூதியம் கேட்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 2: தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் உலக ஓய்வூதியர் தின ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கவுரவமான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை தனியார் மயமாக்க கூடாது. இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க கூடாது. விவசாயிகளின் விரோத வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய சங்கம் பொன்.தங்கவேல், அப்பர் சுந்தரம், கோவிந்தராஜ், போக்குவரத்து சங்கம் அப்பாதுரை, துரை.மதிவாணன், ஞானசேகரன், தொலைதொடர்பு சங்கம் பக்கிரிசாமி, பன்னீர்செல்வம், வங்கி ஊழியர் சங்க சுப்பராமன், ரயில்வே சங்கம் கண்ணன், அரசு ஓய்வூதியம் சங்கம் பாலசுப்பிரமணியன், பூபதி, திருநாவுக்கரசு பங்கேற்றனர்.

பாபநாசம்: பாபநாசத்தில் அனைத்துத்துறை சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கஜேந்திரன் கண்டன உரையாற்றினார். வட்ட செயலாளர் கார்த்தி வரவேற்றார். வட்ட பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார். கும்பகோணம்: கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் துவக்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி நன்றி கூறினார்.

Tags : Demonstration ,pensioners ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்