×

ஒரத்தநாட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒரத்தநாடு, அக். 2: ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே கிழக்கு திமுக ஒன்றியம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட செயலாளருமான துரைசந்திரசேகரன் பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். ஒன்றியக்குழு தலைவர் பார்வதி சிவசங்கரன், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு துணை அமைப்பாளர் மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாபநாசம் கோர்ட்டில் 3ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
பாபநாசம், அக். 2: பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் வரும் 3ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் ஜீவனாம்சம், காசோலை மோசடி, குடும்ப வன்முறை உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்படும். இதில் பாபநாசம் கோர்ட் நீதிபதி, வக்கீல்கள் பங்கேற்பர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,membership camp ,Orathanadu ,
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்