×

ராமகோபாலன் மறைவையொட்டி தா.பழூரில் மவுன ஊர்வலம்

தா.பழூர், அக். 2: இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் நிறுவன தலைவர் ராமகோபாலன் மறைவையொட்டி தா.பழூர் கடைவீதியில் மவுன ஊர்வலம் நடந்தது. இதைதொடர்ந்து கடைவீதியில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து முன்னணி ஒன்றிய பொது செயலாளர் விஜய் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் வெற்றிச்செல்வன், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், கலைச்செல்வன், குமரகுரு, பசுத்தாய் பொறுப்பாளர் சந்தோஷ்குமார், இந்து இளைஞர் முன்னணி ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Tags : closet ,Ramagopalan ,Dhaka ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மவுன ஊர்வலம்