×

வேதாரண்யம் கிழக்கு ஒன்றியத்தில் இணையதளம் மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேதாரண்யம்,அக்.2: வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு, ஆதனூர், கோவில்தாவு ஆகிய இடங்களில் இணையதளம் வழியாக திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை முகாமை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருள்சேகர் உள்ளிட்ட இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் கலந்துகொண்டு 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணையதள வழியாக திமுகவில் சேர்த்தனர்.

Tags : DMK ,membership camp ,Vedaranyam Eastern Union ,
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்