×

நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை தோகைமலை நெசவாளர் காலனியில் சுகாதார பணி

தோகைமலை, அக். 2: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கொரோனா, டெங்கு மற்றும் மலேரியா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதேபோல் தோகைமலை நெசவாளர் காலனியில் கிருமிநாசினி தெளித்தல், கொசுமருந்து அடித்தல் உள்பட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவின்பேரில் தோகைமலை பகுதியில் டிஆர்ஓ ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார். தோகைமலை வேதாசலபுரத்தில் உள்ள நெசவாளர் காலனி பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்த பின்னர் அங்கு நடைபெற்று வரும் சுகாதார பணிகளை மேற்பார;வையிட்டார். தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த பணியாளர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது தெருக்களில் உள்ள வீதிகள், பள்ளிகள், பொது இடங்கள் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் ஓடுகள் என தேங்கிக்கிடக்கும் கழிவு பொருட்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் நிலையில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து கிராமங்களிலும் தேங்கி கிடக்கும் சாக்கடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட தேவையற்ற நீர் நிலைகளை அழிப்பது, வீடுகளுக்கு சென்று குடிநீர் தொட்டிகளை பாpசோதனை செய்து மருந்து தெளித்தல், கொசுமருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய ஆணையர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஏற்கனவே கொரோனா வைரஸ் ஒருபுறம் தற்போது மழைகாலம் தொடங்கி விட்டநிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ்கள் பரவும் நிலை இருப்பதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் பொதுமக்கள் இடையே விடாத சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகள், நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் சாப்பிட வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியுடன் 100 நாள் பணிகள் உள்பட அனைத்து பணிகளின்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் தனமாலினி, துணை தலைவர் சக்திவேல், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவகுமார், ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுசாமி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Tokaimalai Weavers' Colony ,spread ,
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...