டிஆர்ஓ ஆய்வு செய்தார் ராகுல்காந்தி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் எம்பி ஜோதிமணி உள்பட 13 பேர் கைது

கரூர், அக். 2: ராகுல் காந்தி கைதை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் எம்பி உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி கைதை கண்டித்து மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மனோகரா கார்னர் பகுதியில் பகுதியில் கரூர் எம்பி ஜோதிமணி, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சின்னசாமி உட்பட ஏராளமானோர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர். இதனால் கரூர் கோவை சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் 8 பெண்கள் உட்பட 13 பேரை டவுன் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>