ராகுல்காந்தி, பிரியங்கா கைதை கண்டித்து காங்கிரசார் மறியல்-ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.2: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூர், காங்கயத்தில் அக்கட்சியினர் நேற்று மாலை மறியல்-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூர் மாநகர காங்கிரஸ் சார்பில் ரயில் நிைலயம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாநகர தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் ராமசாமி, வெள்ளிங்கிரி, வெ.கோபால்ஜீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காங்கயம்: காங்கயம் பஸ்  நிலையம் ரவுண்டானா அருகில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி தலைமையில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பண்டுபாய், காங்கயம் நகர தலைவர் சிபக்கத்துல்லா, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஷேக்சாதுல்லா, இளைஞர் அணி சரவணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் ராஜேஷ் பங்கேற்றனர். இதேபோல் பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாராபுரம்: தாராபுரம் காங்கிரஸ் மற்றும் மகிளா காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தாராபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து தலைமையில் காந்தி சிலை முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  நகர தலைவர் செந்தில்குமார், மாநில இளைஞர் காங். செயலாளர் முருகானந்தம், குண்டடம் மேற்கு வட்டார தலைவர்  உதயசங்கர்,  கிழக்கு வட்டார தலைவர் ரத்தினசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் பிரணீஸ் பாலு, கொளத்துப்பாளையம் பேரூர் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட துணைத்தலைவர் மோகன்ராஜ், வீராட்சிமங்கலம் ஊராட்சித்தலைவர் செந்தில் குமார், குண்டடம் பேரூர் தலைவர் கோபால், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனலட்சுமி, மாநில மனித உரிமை துறை பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார துணைத்தலைவர்  துர்க்கையப்பன், மருதமுத்து, சீனிவாசன் இளைஞர் காங். மாவட்ட செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>