×

சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 வங்கிகள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

ஊட்டி, அக். 2: ஊட்டி நகராட்சி சார்பில் நகர்நல அலுவலர் பாஸ்கரன் தலைமையில்  கொரோனா விதிமுறை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது கமர்சியல் சாலையில் உள்ள  தேசிய மயமாக்கபட்ட வங்கி உட்பட 3  வங்கிகளில் தனிமனித இடைெவளியை பின்பற்றாமல், வாடிக்கையாளர்களை அனுமதித்திருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து 3 வங்கிகளுக்கும் தலா ரூ.5000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒரு தனியார் வங்கியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது, வங்கி ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் இருந்த எலட்ரிக்கல் கடை, மொபைல் கடைக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.கொேரானா விதிமுறைகளை பின்பற்றாத டாஸ்மாக் கடை, பேக்கரி, பிரபல நகைக்கடை உள்ளிட்டவற்றிற்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஊட்டி நகரில் நேற்று ஒரே நாளில் ரூ.30 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் சரஸ்வதி கேட்டு கொண்டுள்ளார்.

Tags : banks ,businesses ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்