×

தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் அட்டை வழங்கல்

ஊட்டி, அக்.2: நீலகிரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சசிகுமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நௌபுல், சேகரன், பாபு, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் இளைஞரணியில் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்த 35 ஆயிரத்திறகும் மேற்பட்டோருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எல்கில் ரவி, கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் காந்தல் ரவி, மாவட்ட பிரதிநிதி ராஜா உட்பட நகர, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்