×

நோய் பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் கிருமிநாசினி தெளிப்பு

பொள்ளாச்சி, அக்.2: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நகர் மற்றும் கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அதன்பின், கடந்த இரண்டு மாதமாக நகர் மட்டுமின்றி, கிராமபுறங்களிலும் கிருமி நாசினி தெளிப்பு பணி மந்தமானது. கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மட்டுமின்றி, நகரை ஒட்டி உள்ள சூளேஸ்வரன்பட்டி மற்றும் ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி, சின்னாம்பாளைம், மாக்கினாம்பட்டி ஊராட்சிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், பிற இடங்களிலும் கிருமிநாசினி தெளிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஜமீன்ஊத்துக்குளி மற்றும் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிககளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில், டிராக்டரில் இருந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவு குறையும் வரை இப்பணி தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : villages ,spread ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை