×

கொரோனா பரவலை தடுக்க வீடு வீடாக சென்று சுகாதாரத்துறையினர் ஆய்வு

பொள்ளாச்சி, அக்.2: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை மாதத்தில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமானது. சராசரியாக தினமும் 10க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுவரை 232பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நகர் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்தும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில், கொரோனா தடுப்பு குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதை நேற்று, பொது சுகாதாரம் மற்றும் கொரோனா தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் (சென்னை) வடிவேல், மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் (பொறுப்பு) பாலுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார். இதில், கடந்த சில நாட்களில் அடிக்கடி கொரோனா தொற்று பாதிக்கப்படும் இடமான நந்தனார் காலனியை பார்வையிட்டு சுகாதார பணிகுறித்து ஆய்வு செய்தனர். பின்னர், அவர் கூறியதாவது: பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து வார்டுகளிலும் கபசுர குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களே உடனே சிறப்பு வார்டில் அனுமதிக்க வேண்டும்.

5 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா இல்லையென்றால் வீட்டிற்கு அனுப்பலாம். வீட்டில் அவர்கள் சில நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அவர்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க கண்காணிக்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  முககவசம் அணிவது, சமுக இடைவெளியை கடைபிடிக்க தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விதிமுறை மீறுபவர்களுக்கு அபராத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tags : health officials ,home inspection ,spread ,
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...