×

ராகுல்காந்தி கைதை கண்டித்து காங். மறியல்

கோவை, அக். 2: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரயில் நிலையம் முன்பு நேற்று மாலை மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசையும், உத்தரபிரதேச மாநில அரசின் காவல்துறையையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். தடையை மீறி இப்போராட்டம் நடந்ததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில், பச்சைமுத்து, சவுந்தரகுமார், வக்கீல் கருப்புசாமி, காயத்ரி, சி.வி.சி.குருசாமி, குமரேசன், சண்முகம், காந்தகுமார், தாமஸ், வர்கீஸ், சிவக்குமார், ஜனார்த்தனன், கர்ணன், ராஜமாணிக்கம், சவுந்தர்ராஜன், கணேசன், அம்மன் ரங்கசாமி, தண்டபாணி, அசோக்குமார் அருள், வினோத், கார்த்திக், ஜேம்ஸ், குமார், விஜயகுமார், சம்பத், சிவபெருமாள், சுரேஷ்குமார், வசந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

சோமனூர்: கோவை அருகே சோமனூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் ரங்கசாமி, தீரன் கந்தசாமி, துரை மணி, வடக்கு வட்டார தலைவர் கராத்தே ராமசாமி, தெற்கு வட்டார தலைவர் ராயல் மணி, சோமனூர் நகர தலைவர் பாலசுப்பிரமணியம், நகர துணைத்தலைவர்கள் விளம்பர ராமசாமி, மெம்பர் பாலு, இளைஞர் காங்கிரஸ் சுரேஷ் பாலாஜி, நகர துணைத்தலைவர் செல்வம் உள்பட கலந்து கொண்டனர்.

Tags : arrest ,Rahul Gandhi ,
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்