×

கோவை அரசு மருத்துவமனையில் கோவிட்-19 ஐ.சி.யு. வார்டிற்கு தனி ஆக்சிஜன் யூனிட்

கோவை, அக்.2:  கோவை அரசு மருத்துவமனை கொரோனா நோயாளிகள் ஐ.சி.யு. வார்டிற்கு என தனியாக இரண்டு கிலோ லிட்டர் அளவிலான ஆக்சிஜன் யூனிட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, தனியாக சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதையடுத்து, நோயாளிகள் படுக்கைகள் அனைத்திற்கும் ஆக்சிஜன் பைப் சப்ளை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மருத்துவமனையின் பிற வார்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், ஐ.சி.யு., ஐ.எம்.சி.யு. வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில் மொத்தம் 13 கிலோ லிட்டர் அளவிலான திரவ நிலை ஆக்சிஜன் யூனிட் உள்ளது. இதன் மூலம் தினமும் நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐ.சி.யு.வில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என தனியாக 2 கிலோ லிட்டர் அளவிலான புதிய யூனிட் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும், பின்னர் கொரோனா நோயாளிகள் வார்டிற்கு மட்டும் இந்த யூனிட்டில் இருந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore Government Hospital ,ward ,
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...